சென்னை;
காவல்துறை உயர் அதிகாரி முருகன் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டிய புகார் குழுவை காவல்துறையில் இதுவரையிலும் அமைக்காதது ஏன் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலாண்டினா, மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக காவல்துறையின் உயரதிகாரி யான லஞ்ச ஒழிப்பு துறையின் இணை இயக்குனர் முருகன் மீது அதே துறையில் பணிபுரியும் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாக வும் பல்வேறு தொல்லைகளை கொடுத்திருப்பதாக அவர் முருகன் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது போன்று கடந்த 7 மாத காலமாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படிருக்கிறார்.

எனவே தன்னை உடனடியாக வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்யக் கோரியும் வலியுறுத்தியிருக்கின்றார்.அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாநில குற்றப்பிரிவு ஆணையத்தின் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப் பட்டு இருக்கின்றது. அந்தக் கமிட்டியில் ஏடிஜிபி அருணாச்சலம், டிஜிபி தேன்மொழி மற்றும் ஓய்வு பெற்ற எஸ்.பி சரஸ்வதி மற்றும் டிஜிபி அலுவலகத்தில் சீனியர் நிர்வாக அதிகரி ரமேஷ் உள்ளிட்டவர்களை கொண்ட ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக் கின்ற சட்டம் 2013 அடிப்படையில் 10 பேருக்கு மேல் வேலை செய்யும் ஒவ் வொரு நிறுவனத்திலும் பாலியல் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுகின்றது. ஆனால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கையும், பெண்கள் மற்றும் பெண் குழந்தை
களையும் பாதுகாக்க வேண்டிய காவல் துறையில் இதுவரை இத்தகைய புகார் கமிட்டி அமைக்கப்படாதது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் முன் வைக்கிறது.

இப்போது பெண் எஸ்.பியின் புகார் மனு வந்த பின்பே அத்துறையில் இத்தகைய ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த விசாரணை கமிட்டியில் அந்தந்த துறையை சார்ந்தவர்கள் கமிட்டியில் இருந்தாலும் குறிப்பிட்ட துறைக்கு அப்பால் இது
போன்ற வழக்குகளில் விசாரணை செய்த அனுபவம் மிக்க தொண்டு நிறுவனங்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதி இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுகின்றது. ஆனால் இந்த கமிட்டியில் இவர்களுக்கு பதிலாக ஓய்வு பெற்ற காவல்துறையின் கூடுதல்
கண்காணிப்பாளர் சரஸ்வதியை நியமனம் செய்துள்ளது.

இது சாட்டமீறல் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாக்கும் மறைமுக நடவடிக்கை
யாகும். எனவே உடனடியாக இந்தக் குழுவில் அனுபவமிக்க தொண்டு நிறுவனம் – பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதியை இணைக்க வேண்டுமென ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இது போன்று காவல்துறைக்குள் பாதிக்கப்படுகின்ற பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புகார் கொடுக்க வேண்டும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உங்களுடன் துணை நிற்கும்.

Leave a Reply

You must be logged in to post a comment.