சென்னை,
ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவில் அந்தத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். விசாகா கமிட்டி பரிந்துரைகளை முழுமனதுடன் அமலாக்கும் வகையில் விசாரணைக்குழுவில் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக ஐஜி முருகன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை விசாரிக்க காவல்துறை விசாரணை குழு (ஐசிசி) அமைத் துள்ளது. துறையில் இருப்பவர்களோடு பெண்கள் அமைப்பின் பிரதிநிதியை அல்லது இப்பிரச்சனை களை கையாண்ட அனுபவம் மிக்க ஒரு நபரை விசாரணை குழுவில் இணைக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதன்படி அந்த குழுவில் யார் இடம் பெற்றுள்ளார் என விசாரித்தால், காவல் துறையில் பணி செய்து ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பிசரஸ்வதி சொல்கிறார்கள். இது சரியல்ல.அனைவரும் குறிப்பிட்ட துறைக்குள்ளாகவே இருக்கக்கூடாது என்பதால்தான், உச்சநீதிமன்ற விசாகா தீர்ப்பில் வெளியில் இருந்து மூன்றாம் தரப்பு பிரதிநிதி இடம் பெற வேண்டும் என்ற முறை உருவாக்கப்பட்டது. 2013 சட்டத்திலும் முதலில்,அரசுசாரா நிறுவனம் /அமைப்பு என்றுதான் கூறப்படுகிறது. இது சாத்திய மில்லை என்றால்தான் விசார ணைக்கு தனி நபரை நியமிக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் இல்லையா? இத்தகைய பிரச்சனைகளில் தலையீடு செய்த, போராடிய அமைப்புகள் எத்தனையோ உண்டு. தனிநபர்களும் உண்டு. ஆனால் இவர்களை எல்லாம் விட்டு விட்டு, அந்த துறையிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றவரை, இப்பிரச் சனைகளை கையாண்டு அனுபவம் மிக்க தனிநபர் என்று சேர்ப்பது எந்த வகையில் நியாயம்? காவல்துறை கையா ளும் விதமும், இயக்கங்கள் கையாளும் விதமும் ஒன்றா?இப்படி விசாகா கமிட்டியில் உள்ள ஒரு வரியை பிடித்துக்கொண்டு ஏன் காவல்துறை ஒளிந்து கொள்ள வேண் டும்? மடியில் கனம் இல்லைஎன்றால் வழியில் பயம் எதற்கு? இது விசாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு எதிரா னது. எனவே விசாகா கமிட்டி பரிந்துரைகளை முழுமனதுடன் அமலாக்கும் வகையில் விசாரணைக்குழுவின் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: