சென்னை,
பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அறிமுகப்படுத்திய புற்றுநோய் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து எல்ஐசி தென் பிராந்திய மேலாளர் (சுகாதாரம்) டி.ராஜலெட்சுமி சென்னையில் செவ்வாயன்று (ஆக.21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்ஐசி தென்மண்டல பிரிவு ஜீவன் ஆரோக்கியா, கேன்சர் கவர் என்ற இரண்டு மருத்துவ சுகாதார காப்பீட்டுத்திட்டங்களை மிகச்சிறந்த முறையில் விற்பனை செய்து வருகிறது. இந்த இரண்டு சுகாதார காப்பீட்டுத்திட்டங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கேன்சர் பாதுகாப்பு மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பாலிசிகளின் விற்பனையில் உச்சத்தை தொட்டுள்ளது. இரண்டு பாலிசிகளும் பங்குச்சந்தையுடன் இணையாத வரையறுக்கப்பட்ட பலன் தரக்கூடிய சுகாதார காப்பீட்டுத்திட்டமாகும். குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள முகவர்கள் இந்த திட்டடங்களை விற்பனை செய்துவருகின்றனர்.

கேன்சர் கவர் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1.31 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளா, மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டலம் 39 ஆயிரத்தி 190 கேன்சர் கவர் சுவர்பாலிசிகளை விற்பனை செய்து அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.  திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம், கோழிக்கோடு, கோட்டங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2017-18ல் வணிக ஆண்டில் 23843 ஹெல்த் பாலிசி உரிமங்களைதீர்வு செய்து ரூ.32.31 கோடிபட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 200க்கம் மேற்பட்ட புற்று நோய் வகைகள் உள்ளன. இந்தியாவில் இதற்கான சிகிச்சை செலவுகள் ரூ.5லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை உள்ளது. 20 வயது முதல் 65 வயதுள்ளவர்கள் வரை இத்திட்டத்தில் சேரலாம். மேலும் அதிகப்பட்ச காப்பீட்டுத்தொகை ரூ.50 லட்சம். ஆரம்ப கட்ட புற்று நோயாளிகளுக்கு காப்பீட்டுத்தொகையில் 25விழுக்காடு ஒரே தவனையாக வழங்கப்படும். முற்றிய நிலையில் முழு காப்பீட்டுத்தொகையில் முழு காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் ஒரு விழுக்காடு பாதிக்கப்பட்ட நபருக்கோ இறந்தவரின் நியமனதாரருக்கோ ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக 10ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பு கிடைக்கும். இதனால் எல்ஐசியின் இந்த இரண்டு சுகாதார காப்பீட்டுத்திட்டங்களும் குடும்பத்தினர் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களை விற்று சிகிச்சை பெறவேண்டிய நிலையில் இருந்து பாதுகாக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆர்.துரைசாமி (பிராந்திய மேலாளர்-தென்மண்டலம்- சிஎல்ஐஏ) பி.சத்தியவதி (நிறுவன தொடர்பு மேலாளர்) ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.