கடலூர்,
என்எல்சி இண்கோசர்வ், ஹவுசிகோஸ், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை அலுவலகத்தில் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

நெய்வேலி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற னர். இவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச சம்பளம், பஞ்சப்படி, தொழிலாளர்களை சொசைட்டியில் இணைப்பது, சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தரப் படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த 4 ஆம் தேதி சிஐடியு அலுவலக வளாகத்தில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் 20 ஆம் தேதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக புறப் பட்டுச் தலைமை அலுவகத்தில் வேலை நிறுத்தப்போராட்ட நோட்டீஸ் வழங்குவது எனத் தீர்மானித்தனர்.

அதன்படி, திங்கட்கிழமை மாலை (ஆக.20) மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணிக்கு சிஐடியு ஒப்பந்தத் தொழிற்சங்க பொதுச் செயலர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பொதுச்செயலர் சின்ன ரகுராமன் பேரணியைத் தொடக்கி வைத்தார். இதில், சிஐடியு, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், எல்எல்எப்., தமிழக வாழ்வுரிமை சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் என்எல்சி தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்தனர். நேரு சிலை அருகே வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், சிஐடியு மாவட்டச் செயலர் டி.கருப்பையா தலைமையில் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளைக் காவல்துறையினர் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதன்மை பொது மேலாளர்(மனிதவளம்) தியாகராஜனிடம் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை மனுவினை வழங்கினர். அதனைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான மனுவை வழங்கியுள்ளோம். என்எல்சி அதிகாரிகள் மிரட்டும் தோரணையில் பேசுவது சரியல்ல என்று எச்சரிக்கை செய்தார். நாங்கள் கொடுத்துள்ள நோட்டீஸ் மீது 14 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எந்த நேரத்திலும் வேலை நிறுத்தத்தைத் தொடங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.