லக்னோ;
இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கும் பேச்சிற்காக, உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத்துக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆதித்யநாத் பேசிய பிறமத வெறுப்புப் பேச்சைத் தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. இதற்காக 2009-ஆம் ஆண்டு ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களை மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும், குற்றச்சாட்டு ரத்தை உறுதிப்படுத்தியது.

ஆனால், தனது சட்டப்போராட்டத்திலிருந்து பின்வாங்காத- மனுதாரர் ரஷீத் கான், இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆதித்யநாத்தின் வெறுப்புப் பேச்சு தொடர்பாக பதிலளிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.