திருப்பூர்,
அரசு துறைகளில் அவுட்சோர்சிங் முறையை கைவிடக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செவ்வாயன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அரசுத்துறைகளில் உள்ள பணியிடங்களை ஒழித்திட அமைக்கப்பட்ட ஆதிஷேசையா கமிட்டியை களைத்திட வேண்டும். அரசாணை எண் 56 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுப்பணிகளை தனியார் கார்ப்பரேட்களிடம் ஒப்படைத்து வேலையில்லா இலைஞர்களின் உழைப்பை சுரண்டும் அவுட்சேர்சிங் மற்றும் கான்ட்ராக்ட் நியமனமுறைகளை கைவிட வேண்டும். வேலையில்லா இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்,மாணவர்,வாலிபர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் அம்சராஜ் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் கு.குமரேசன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ச.நந்தகோபால், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தெள.சம்சீர் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட பொருளாளர் எஸ்.முருகேசன் நன்றிகூறினார். இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.