புதுதில்லி;
அதிமுக விதிகள் திருத்தம் தொடர்பாக தில்லி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் தொடர்ந்த வழக்கில் உத்தரவுக்குத் தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில், அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடர்பாக கே.சி. பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுத்ததோடு, தேர்தல் ஆணையம் இது பற்றி முடிவெடுக்கலாம் என்றும், ஆனால் செப்டம்பர் 13ஆம் தேதிவரை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: