புதுதில்லி;
இந்தியாவில் மழை- வெள்ளத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 16 ஆயிரம் பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாகவும், சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புக்கள் ஏற்படும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.“மிகவும் மேம்படுத்தப்பட்ட, முன்னேறிய செயற்க்கைக்கோள் வசதிகளை கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், மாநில நிர்வாகங்களின் கட்டமைப்பு வசதிகள் பேரிடர் ஆபத்தை உண்டு பண்ணும் வகையிலே உள்ளது” என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.

குஜராத் படுமோசம்
“இமாச்சலபிரதேசத்தை தவிர மற்ற எந்த மாநிலங்களும் தனக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை; அதிலும் குஜராத் மாநிலம் மிகவும் மோசம்” என்று கூறியுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம், “நாட்டின் 640 மாவட்டங்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளன; கடுமையான பேரிடர் சமயங்களில் ஏற்படும் ஆபத்துகளை தடுத்தல் மற்றும் குறைத்தல், பேரழிவிற்கான நிவாரணம், மறுவாழ்வு போன்றவற்றில் இந்த மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளன” என்றும் தெரிவித்துள்ளது.பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்தும், நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதை எந்த மாநிலங்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதையும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: