புதுதில்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்து, காங்கிரஸ் கட்சி மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “பிரதமர் மோடி கீழ்த்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. ஏன் அவர் இவ்வாறு கண்ணியமற்ற அரசியலில் ஈடுபடுகிறார்”, என்று மணிசங்கர் அய்யர் விமர்சித்திருந்தார். இதற்காக அவர் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருத்தார்.

Leave A Reply

%d bloggers like this: