ஈரோடு,
மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தை போக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு தாலுகா மூன்றாவது மாநாடு மொடக்குறிச்சி பகுதியில் திங்களன்று தாலுகா தலைவர் சென்னியப்பன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் துவக்க உரையாற்றினார். தாலுகா செயலாளர் தங்கவேல், பொருளாளர் என்.பழனிச்சாமி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். மாவட்ட தலைவர் அண்ணாதுரை, சிபிஎம் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, இம்மாநாட்டில் சுதந்திரப் போராட்ட தியாகி அரச்சலூர் பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க வேண்டும். மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிவைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி ஆவணப் படுகொலைகளை தடுத்திட உரிய சட்டமியற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இதைத்தொடர்ந்து ஈரோடு தாலுகா கமிட்டியானது ஈரோடு தாலுகா கமிட்டி மற்றும் மொடக்குறிச்சி கொடுமுடி தாலுகா கமிட்டி என இரு கமிட்டிகளாக பிரிக்கப்பட்டது. இதில் ஈரோடு தாலுகா கமிட்டியின் தலைவராக என்.பழனிச்சாமி, செயலாளராக சொங்கப்பன், பொருளாளராக இளங்கோ உட்பட 18 பேர் கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல், மொடக்குறிச்சி கொடுமுடிதாலுகா தலைவராக டி.தங்கவேல், செயலாளராக சிவலிங்கம், பொருளாளராக கணேசன் உட்பட 16 பேர் கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்டச் செயலாளர் பழனிசாமி நிறைவுரை ஆற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.