ஈரோடு,
ஆதிதிராவிடர் மாணவர் விடுதி பணியாளர்களால் தாங்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட மாணவர்கள் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு ரயில்வே நிலையம் அருகே மீன் மார்க்கெட் எதிரே ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து, பல்வேறு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இங்கு தங்கி பயிலும் மாணவர்களில் சிலர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிராபகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் விடுத்தியின் காப்பாளர், சமையலர், துப்புரவாளர்கள் உள்ளிட்டோர் எங்களை படிக்க அனுமதிப்பதில்லை. அவர்களது பணிகளை செய்யும்படி கூறியும், எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மன நிம்மதி இழப்பதுடன் பள்ளிக்கான பணியை சரியாக செய்ய முடியவில்லை. எங்களை போன்று பெரும்பாலான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், துறை அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: