திருப்பூர்,
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை மாத ஊதியம் கேட்டு திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியமானது ஒவ்வொரு மாதமும் தாமதமாக வழங்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து ஊழியர் சங்கங்கள் நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து அவை சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாத ஊதியம் தற்போது வரை வழங்கப்படாததால் ஒப்பந்த தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.இதையடுத்து ஜூலை மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி திங்களன்று திருப்பூரிலுள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முத்துக்குமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், கிளை செயலாளர் ரமேஷ், குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர் நிறைவு கூறினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: