நாமக்கல்,
கள உதவியாளர் எழுத்துத் தேர்வு இலவச பயிற்சி மையம் துவக்க விழா திருச்செங்கோட்டில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அவ்வை கல்வி நிலையத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஈரோடு மண்டலம், டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் கள உதவியாளர் எழுத்துத் தேர்விற்கான இலவச பயற்சி மையம் துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்வி மையத்தின் அமைப்பாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். மின்திட்ட செயலாளர் எஸ்.கோவிந்தராசு வரவேற்புரையாற்றினார். நாமக்கல் கோட்ட செயலாளர் எம்.சௌந்தரராஜன், துணை தலைவர் சீனிவாசன், துணை தலைவர் குப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சி முகாமினை மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில உதவிப் பொதுச்செயலாளர் ஜெயசங்கர் துவக்கி வைத்துப் பேசினார். சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் (ஓய்வு) பி.கே.ராஜேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அம்பேத்கர் இலவச கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் எம்.கணேசபாண்டியன், சிஐடியு நாமக்கல் மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, கே.சின்னுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: