தீக்கதிர்

ஒண்டி வீரன் சிலைக்கு சிபிஎம் மாலை அணிவிப்பு….!

திருநெல்வேலி;
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுதினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாளைங்கோட்டையில் உள்ள ஒண்டி வீரன் மணிமண்டபத்தில் உள்ள ஒண்டி வீரன்
சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ஜெயராஜ், க.ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.வர குணன், கு.பழனி மற்றும் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தமிழக சட்ட பேரவைத் தலைவர் தனபாலன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.