அவிநாசி,

வீட்டுவரி மற்றும் குடிநீர் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று காலை அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 20 வருடங்களாக சொத்துவரி உயர்த்தப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கில் சொத்துவரியை உயர்த்தக்கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசு கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி சுமார் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, குடிநீருக்கான கட்டணமும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட வரிகளின்படி சொந்த குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடு அளவிலும், வாடகை குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 சதவீதம் அளவுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்து மற்றும் குடிநீருக்கான கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண வைப்புத்தொகையை குறைத்தல், சொத்துவரி உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு ஒன்றையும் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: