ஜகர்தா,
இந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் ஞாயிறன்று 12 மணி நேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் இருந்து 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோம்போக்கில் ஞாயிறன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் நேற்று மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மேலும், பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் லோம்பாக் நகரமே இருளில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 5ம் தேதி இதே லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 460க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: