===முனைவர். தி.ராஜ்பிரவீன்===
நமது நாட்டில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – பல துறைகளில் வேகமாக பரவி
வந்தாலும், வேளாண் துறையில் இதன் பரவலாக்கம் குறைவே. போதிய அளவு மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லாத சூழல், தகவல் தொடர்பு கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை, விவசாயிகளின் கல்வி அறிவு மற்றும் பொருளாதார சூழல் காரணமாக தகவல்
தொழில்நுட்ப பயன்பாடு வேளாண் துறையில் குறைந்தே காணப்பட்டது. மேலும் பெரும்பாலான தகவல்கள் வட்டார மொழிகளில் இல்லாத நடைமுறைச் சூழலும் இதற்கு முக்கிய காரணம். கடந்த சில ஆண்டுகளாக நாடுமுழுவதும், பெருகி வரும் சாலை வசதிகள், கிராமங்களில் அதிகளவு மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் விரிவாக்கம் செய்யப்பட்ட சூழல் காரணமாக தகவல் தொழில்நுட்பத்தின் தேவையும் பயன்பாடும் பெருகி வருகிறது.

இத்தகைய சூழலில் கைபேசிகள் வாயிலாக வட்டார மொழியில் வழங்கப்படும் வேளாண் மற்றும் பிற வளர்ச்சி துறைகளின் தகவல்கள் காரணமாக கிராமப்புற மக்களிடம் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக கிராமப்புற மக்களுக்கு துரிதமாக வழங்கப்படும் தகவல்களைக் கொண்டு தங்களின் பயிர், கால்நடைகள் மற்றும் பிற வேளாண் பணிகளை முறைப்படுத்த உதவுவதால் கிராமப்புற இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளின் பயன்பாடுகள் பெருகி வருகிறது. இத்தகைய நடை
முறைச் சூழலில் நமது விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு செயல்படும் புதிய இணைய வழி விரிவாக்க முயற்சிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இணைய வழி வேளாண் விரிவாக்க முயற்சிகள்
நமது நாட்டின் தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் புதிய இணைய வழி விரிவாக்க முயற்சிகள் கடந்த 1998ம் ஆண்டில் வர்ணாவையர் கிராமம் என்று துவங்கப் பட்டது. பின்னர் கியான் தூத் (2000ஆம் ஆண்டில்), நோக்கிய லைப் (2009ம் ஆண்டு) ரூட்டர்ஸ் சந்தை, இ.சாகு, இ-க்ரிஷி, இ-சௌபால, ஐ-கிஸான் ஆகிய முன்னோடி தொழில்நுட்ப முயற்சிகள் நமது விவசாயி
களுக்கு வழங்கப்பட்டன. இதன் வாயிலாக வேளாண்மை,கல்வி, ஆரோக்கியம், பயனுள்ள பொழுது போக்குகள், அரசின் பல சேவைகள், நலத்திட்டங்கள், அரசின் மானியங்கள் குறித்த விபரங்கள் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.வறண்ட பகுதிகளில்…
நமது நாட்டில் மிகவும் வறண்ட பகுதிகளில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் தேவை மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்டு ‘இக்ரி சாட்’ (சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையம்) வெறும் தகவல் தொழில்நுட்ப சேவையை மீட்டும் வழங்காமல் அவர்களின் கலாச்சாரம், சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் தனது தகவல் தொழில்நுட்ப சேவையை புதிய நவீன கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இணைத்து “ட்ரான்” என்ற புதிய கருவியின் வாயிலாக குரலை பதிவு செய்து வழங்கி வருகிறது. இதன் வாயிலாக அனைத்து வல்லுனர்களும் ஒன்று கூடி பணி செய்வதற்கு உந்துதலாய் அமைந்துள்ளது. இத்தகைய விரிவாக்க முயற்சிகள் ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா பாலைவனத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் ஆசியாவில் உள்ள சிறு விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற பெரிதும் உதவியுள்ளது.

இந்தியாவில் இணைய வழி முயற்சிகள்                                                                                                                                       தற்போது ஆந்திர மாநிலத்தில் இக்ரி சாட் நிறுவனம்
மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை இணைந்து ஆந்திர அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் ‘ரைத்துக் கோசம்’ (விவசாயிகளுக்காக என்று பொருள்) என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பல மாவட்டங்களில் இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரு
கிறது. விவசாயிகளுக்கான புதிய விதைப்பு செயலியுடன் தனிப்பட்ட கிராம அறிவுரையாளர் மூலம் விவசாயிகளுக்கு சரியான விதைப்பு நேரம் பற்றி எடுத்துச் செல்ல உதவுகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக வானிலையில் ஏற்படும் உறுதி
யற்ற தன்மையை இதனால் தவிர்க்க முடிகிறது.

இந்த விதைப்பு செயலி மூலம் வானிலை, மண் மற்றும் இதர அறிகுறிகள் சார்ந்த விபரங்களை விவசாயிகள் துரிதமாக பெற முடிகிறது. இந்த விதைப்பு செயலியில் அமெரிக்கா வை மையமாக கொண்ட ‘அவேர் இங்க்’ என்ற நிறுவனம் வழங்கிய சக்தி வாய்ந்த செயற்கை புரிதிறன்கள் வானிலை முன்னறிவிப்பு மாதிரிகள் மற்றும் கடந்த 45 வருடங்களில் பெய்த மழையளவும் மற்றும் விவ சாயிகள் கடந்த 10 வருடங்களாக பின்பற்றி வரும் நிலக்கடலை விதைப்பு புள்ளி விபரங்கள் பயன்படுத்தப் படுகிறது. இப்புள்ளி விபரம் வருமுன் அறியும் திறனை வளர்த்து சரியான விதைப்புக் காலத்தை தேர்வு செய்து விவசாயிகள் சாகுபடி செய்ய உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான பயிர் மகசூலை உறுதிப்படுத்துகிறது. தெலுங்கு மற்றும் ஆங்கில மொழியில் தகவல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எழுத்தறிவு தடைகளை தாண்டி தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில் குரல் பதிவு செய்தும் விவசாயிகளுக்கு தேவை யான தகவல்கள் அனுப்பப்படுகிறது.இவ்வாறு தகவல் தொழில்நுட்பம் வாயிலாக ஒரு பொது மேடையில் சிறு விவசாயிகள் மற்றும் வல்லுநர் களை இணைத்து காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு சரியான தகவல்களை வழங்கி அவர்கள் சரியான சாகுபடி முடிவுகளை மேற்கொண்டு அதிக மக
சூல் மற்றும் லாபம் பெற உதவுகிறது.

இத்தகைய இணைய வழி விரிவாக்க முயற்சிகள் வெற்றிபெற விவசாயிகள், இளைஞர் அமைப்புகள், ஆராய்ச்சி மையங்கள், மாநில அரசு, பல தொண்டு நிறு
வனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றாக கூடி ஒருங்கிணைந்த முறையில் உழைத்து ஆந்திராவில் உள்ள சிறு, குறு விவசாயிகளில் வேளாண்மையில் அதிக
லாபம் பெறவும் நிலைத்திருக்கவும் செய்திருப்பது வேளாண்மையில் புதிய தகவல் தொழில்நுட்ப பயன் பாட்டில் ஒரு சாதனை முயற்சி ஆகும்.

கட்டுரையாளர்:உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

Leave a Reply

You must be logged in to post a comment.