ஆடவர் டிராப் பிரிவு துப்பாக்கிச்சுடுதல் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சந்து சிங்,லக்‌ஷய் ஆகியோர் பங்கேற்றனர்.தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் சீன தைபே வீரர் யாங் குன்பி 48 புள்ளிகளுடன் முதலிடம் இடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய வீரர் லக்‌ஷய் 43 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும்,30 புள்ளிகளுடன் தென்கொரிய வீரர் டேமியோங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.மற்றொரு இந்திய வீரர் சந்து சிங் 26 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.