கோயம்புத்தூர்:
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர் களுக்கு தடையில்லா சான்று கேட்டு நிர்ப்பந்திப்பதாகக் கூறி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 7 கல்லூரிகளில் முதுகலை வேளாண் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன.நடப்பாண்டில், முதுகலையில் 500 இடங்களும், ஆராய்ச்சி படிப்பு களில் 250 இடங்களும் நிரப்பப்படு கிறது. இந்த படிப்புகளில் சேரமாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இத்தேர்வினை மாநிலம் முழுவதும் உள்ள ஏராளமான மாணவர்கள் எழுதினர்.

இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அட்மிட் கார்டு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கட்டணத்தை செலுத்தினர்.இந்நிலையில், திங்களன்று முதுகலை மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 320 பேர் அழைக்கப்பட்டனர். இதன்படி காலை முதல் பல் கலைக்கழகத்திற்கு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று வந்தனர். அப்போது, இளங்கலை படித்த கல்வி நிறுவனங்களில் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஒசி) பெற்றவர்கள் மட்டும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்க லாம் எனவும், என்ஒசி இல்லாத வர்கள் பங்கேற்க முடியாது என வும் திடீரென தெரிவித்தனர்.

வேளாண் பல்கலைக்கழ கத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு மாணவர் சேர்க்கைக்கு வந்த
அண்ணாமலை பல்கலைக்கழ கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள், பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், “அண்ணாமலை பல்கலை யில் பி.எஸ்.சி., அக்ரி இளங்கலை படித்தேன். தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முதுகலையில் சேர நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தேன். ஆன்லைன் மூலம் கல்வி கட்டணம் ரூ.27, 296 கட்டி
னேன். இந்நிலையில், திடீரென என் இ- மெயிலுக்கு இளங்கலை படித்த கல்லூரியில் இருந்து என்ஒசி பெற்று வந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியும். கல்வி கட்டணம் செலுத்த வேண்டாம் என வேளாண் பல்கலை சார்பில் தொவித்து இருந்தனர். நான் படித்த பல்கலை.யை கேட்டபோது அவர்கள் என்ஒசி சான்று தேவையில்லை என கூறினர்.

மேலும், வேளாண் பல்கலைக் கழகத்திற்கும் இதுதொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் மாணவர் சேர்க்கைக்கு வந்த போது என்ஒசி இருந்தால் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியும் என தெரி வித்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களை தனியாக அழைத்து என்ஒசி இல்லை என்றால் பங்கேற்க முடி யாது என தெரிவித்தனர். என்ஒசி குறித்து தெளிவாக சொல்லாமல் எங்களை கடைசி நேரத்தில் புறக்கணித்துள்ளனர். பணத்தை கட்டி ஏமாந்து உள்ளோம்.மேலும் வேறு எங்கும் சேர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் பிரச்சனைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எங்களின் சான்றிதழை சரிபார்த்து கல்லூரியில் சேர அனுமதிக்க வேண்டும்” என்றார். 

இதுகுறித்து பல்கலை.யின் முதுகலை டீன் சிவகுமார் கூறியதாவது: மத்திய, மாநில அரசின் விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட 5 பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களுக்கு என்.ஒ.சி வழங்குவது தொடர்பாக தெரிவித்து இருந் தோம். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு நாங்கள் காரணம் இல்லை. மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். மேலும், அண்ணாமலை பல்கலையை சேர்ந்த 120 பேர் மாணவர் சேர்க்கைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான இடங்கள் நிறுத்தி வைக்கப்படும். ஆனால், இது எத்தனை நாள் என்பது கூற முடியாது. கமிட்டி அமைத்து முடிவு செய்யப்படும். இந்த பிரச்சனை யில் அவர்களின் நிறுவனங்கள் தான் மாணவர்களுக்கு என்.ஒ.சி வழங்க வேண்டும். விதிகளை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது” என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.