மான்சாண்டோ- எனும் விதை மற்றும் பூச்சி மருந்து கார்ப்பரேட் நிறுவனத்தின் தயாரிப்பான “ரவுண்ட் அப்” எனும் களைக் கொல்லியை அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியின் ஊழியர் ஜான்சன் என்பவர் தெளித்து வந்த நிலையில், அவருக்கு புற்று நோய் பாதித்துள்ளதால் அந்நிறுவனத்திற்கு 27 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மான்சாண்டோ, சிஞ்சண்டா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உலக அளவில் 65 சதம் விதைகளையும், பயிர்களுக்கான மருந்துகளையும் விற்பனைசெய்து வருகிறது. இதில் மான் சாண்டோ மட்டுமே விற்பனையில் 38 சதம் அளவில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ரவுண்ட்அப் எனும் வீரியமான களைக் கொல்லியை பள்ளிக்கூட ஊழியர் ஜான்சன் என்பவர் களைகளை அழிக்க தெளித்து வந்துள்ளார். இதன்பின் இவருக்கு உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் பரிசோதித்த போது இவர் புற்றுநோயால் பாதித்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

புற்றுநோய் தாக்குதலுக்கு காரணம் கிளை போஸிட் எனும் விஷம் இவர் உடலில் பரவி இருப்பது தான்காரணம் என ஆய்வில் தெரிந்துள்ளது. சம்பந்தமில்லாமல் இந்த விஷம் எப்படி இவரது உடலில் பரவியது என்று ஆய்வு செய்த போது இந்த ஊழியர் தெளித்தரவுண்ட் அப் களைக் கொல்லியில் உள்ள இதே விஷம் தான் உடலில்ஊடுருவியுள்ளது என்று மருத்துவ ஆய்வு மூலம் கண்டறிந்து நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்கா சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள வழக்காடு மன்றம் இந்தவழக்கை விசாரித்து நீண்ட விவாதங்களுக்கு பின் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் களைக் கொல்லியை தயாரித்திட்ட மான் சாண்டோ கம்பெனிக்கு 29.6 கோடி ரூபாய்(296 மில்லியன் டாலர்) அபராதம் விதித்துள்ளது.

தமிழகத்தில்…
இந்நிலையில் ரவுண்ட் அப் என்ற இந்த களைக் கொல்லியை வளர்ந்த பெரிய களைகளையும், தேவையில்லாத செடிகளையும் வரப்பில் உள்ள களையையும் அழிக்க பரவலாக தமிழகத்திலும் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளும், மக்களும் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் இந்த கேடான செய்திவந்துள்ளதை மத்திய, மாநில அரசுகள் கவலையோடு பார்க்க வேண்டும். இப்படியான பல விவசாய மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை விற்பனைக்கு அனுப்பும் முன்னே உரிய விஞ்ஞான மருத்துவ ஆய்வுகளை செய்திட வேண்டும் என்று ஆய்வுக் கூடங்களும், வரன்முறையும், அரசு நிறுவனங்களும் உள்ளன.ஆனால் ஆய்வு செய்யாமலேயே தான் தொடர்ந்து பல மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. உடனடியாக மேற்கண்ட “ரவுண்ட் அப்” களைக் கொல்லியை அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை தமிழக அரசு “ரவுண்ட்அப்” களைக் கொல்லியை தடை செய்திட வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.