சேலம்,
சேலம் உருக்காலை முத்தமிழ் மன்றம் மற்றும் சிலம்பாட்ட கழகம் சார்பில் சார்பில் 2ம் ஆண்டு சிலம்பாட்ட போட்டி ஞாயிறன்று சேலம் உருக்காலையில் நடைபெற்றது.

தமிழர் கலாச்சாரத்தை வலியுறுத்தும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்ட போட்டியை மாணவர்களிடையே கொண்டு செல்லும் வகையில் சேலம் இரும்பாலை பகுதியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் 2 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்கலும் வழங்கப்பட்டன. இதில் சேலம் உருக்காலை பணிக்குழு பொது மேலாளர் எ.சிதம்பரம், டிஜிஎம் சி.ஜெயந்தி, சிலம்பாட்ட சங்கத் தலைவர் செங்காகவுண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.