புதுதில்லி :

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுமார் 2,10,000 ATM இயந்திரங்களில் இனிமேல் மாலை வேளைகளில் பணம் நிரப்பும் பணி நடைபெறக்கூடாது என புதிய விதியை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாடு முழுவதும் வங்கி சார் மற்றும் சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் 8000 வாகனங்கள் மூலம் தினமும் 15000 கோடி அளவிலான பணம் ATMங்களில் நிரப்பப்பட்டு வருகின்றன. சிலசமயங்களில் அந்நிறுவனங்கள் பணத்தை தங்களின் பாதுகாப்பு அறைகளிலேயே இரவு முழுவதும் வைத்துக்கொள்வதும் உண்டு. இந்த பணிக்கு தற்போது மத்திய உள்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

அதன்படி, வங்கியிலிருந்து தினமும் நாளின் முதல் பாதியிலேயே ATMகளில் பணம் நிரப்பும் நிறுவனங்கள் பணத்தை வசூலித்துக் கொள்ள வேண்டும். பெருநகரங்களில் உள்ள  ATMங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்பகுதிகளில் உள்ள  ATMங்களில் மாலை 6 மணிக்கு மேலும் இனிமேல் பணம் நிரப்பும் பணி மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் வாகனத்திற்கு குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வங்கியின் செலவினம் பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அச்செலவுகள் வங்கியின் வாடிக்கையாளர்களாக உள்ள சாமானிய மக்களின் மீது திணிக்கப்படும் அபாயமும் உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: