சேலம்,
சேலத்தில் தமிழ்நாடு அளவிலான யோகாசன சாம்பியன் போட்டி சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.
யோகாசனத்தின் நன்மைகள் குறித்தும் மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வயது வாரியாக யோகா போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பட்சி மொதனாசனம், உய்தராசனாம், ஹன சாசனாம், சக்ரா சன பதகஸ்தாசனம் ஒம் கார ஆசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை மிகவும் நேர்த்தியாக மாணவ, மாணவிகள் செய்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மற்றும் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக மாணவ மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை யோகா பயிற்சியாளர் செல்வகுமார் செய்திருந்தார். இதில் பல்வேறு பகுதியில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.