மும்பை :

மகாராஷ்டிரா சமூக ஆர்வலரைக் கொன்ற கொலையாளியை ஐந்து வருடங்கள் கழித்து சிபிஐ கைது செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர். இவர் கடந்த 2013 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி அன்று அவருடைய இல்ல வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை மகாராஷ்டிர மாநில காவல்துறை விசாரித்து வந்தது.

கடந்த 2014 ஆம் வருடம் மே மாதம் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்து அமைப்பான சனாதன சன்ஸ்தாவின் கிளை அமைப்பான இந்து ஜனஜாக்ருதி சமிதியை சேர்ந்த வீரெந்திர திவாதி 2016 ஆம் வருடம் ஜூன் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த கொலையை திட்டமிட்டதில் இவருக்கும் பங்குள்ளதாக கூறப்பட்டது.

கொலப்பட்ட நரேந்திர தபோல்கர் ஆரம்பித்த அமைப்பான மகாராஷ்டிரா அந்தசரத்தா நிர்மோலன் சமிதிக்கும் சனாதன சன்ஸ்தாவுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. அதற்காக தபோல்கர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது. அவரை சுட்டதாக கூறப்பட்ட சரத் கல்சாகர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அதன் பிறகு இந்த வழக்கை சிபிஐ மற்றும் மகாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்புக் காவல்துறையினர் விசாரித்து வந்த போதும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிலும் மற்றும் இரு வழக்கிலும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளதை சென்ற வாரம் கண்டித்தது.

அதன் பிறகு தபோல்கரை சுட்டவர்களில் ஒருவரான சச்சின் பிரகாஷ்ராவ் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. இது குறித்து தீவிரவாத எதிர்ப்பு காவல்துறை அதிகாரி, “நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சரத் கல்சாகர் குற்றவாளிகளில் ஒருவர் இல்லை எனவும் அவர் குற்றவாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை அளித்து உதவி புரிந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டவர்களில் ஒருவரான சச்சின் பிரகாஷ்ராவ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நாங்களும் சிபிஐ அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடட்தி வருகிறோம். விரைவில் மற்றொரு கொலையாளியும் கைது செய்யபடுவார்.” என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.