திருப்பூர்
திருப்பூர் நிப்ட் கல்லூரியில் லிம்காபுத்தக சாதனைக்காக சென்டேங் எனப்படும் நுண் ஓவியத்தை மாணவ, மாணவிகள் 34 மணி நேரம் தொடர்ந்து வரைந்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள நிப்டி கல்லூரியில் மாணவ, மாணவிகள் லிம்கா சாதனைக்காக தொடர்ந்து 34 மணி நேரம் நுண் ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக காலை 7 மணியளவில் சுமார் 50 மாணவர்கள் இந்த முயற்சியினை நிகழ்த்த துவங்கினர். இவர்கள் இரவு பகலாக 34 மணி நேரம்தொடர்ந்து இரண்டாயிரம் அடி நீளமுள்ள வரைதாளில் வரைந்தனர். இந்த ஓவியத்தில் இயற்கை மாசுப்படுவதை கட்டுப்படுத்துவது, மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் நுண் ஓவியங்களாக வரைந்தனர். இவர்கள் 34 மணி நேரஇலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில்30 நிமிடங்கள் முன்னதாகவே வரைந்து முடித்தனர். மேலும், இந்தியாவிலேயே நுண் ஓவியம் 34 மணி நேரம் வரையப்பட்டது இதுவே முதல் முறை என மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவ,மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: