சேலம்,
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மைய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் சமண மதங்களைச் சார்ந்து அரசு, அரசுஉதவிபெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ,ஐடிசி,வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையும் பெறுவதற்கு மத்திய அரசின் றறற.ளஉடிடயசளாயீள.படிஎ. என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை (புதியது மற்றும் புதுப்பித்தல்) மாணவ, மாணவியர்கள் 30.09.2018 தேதிக்குள் மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகையினை பெறஉரிய காலத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.