புதுதில்லி :

கேரளாவில் வெள்ளத்தினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டிலும்  இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மக்களே சேகரித்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று டில்லியில் உள்ள மக்கள் கேரள வெள்ளத்துக்கான நிவாரணப் பொருட்களை சேகரித்தனர். அப்போது உச்சநீதிமன்ற வளாகத்தில் நிவாரணப் பொருட்களை நீதிபதி குரியன் ஜோசப்பும் சேகரித்தார். குரியன் ஜோசப் தன்னுடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை எடுத்து வந்ததோடு அங்கு மற்றவர்கள் அளித்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி பேக் செய்து வந்தார்.

சேகரித்த பொருட்களை விமானம் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் நீதிபதியே முன்னின்று செய்து வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.