திருவனந்தபுரம் :

கேரளாவில் விதிக்கப்பட்டிருந்த ரெட் அலேர்ட்(red alert) எனப்படும் அதிதீவிர வெள்ள அபாய எச்சரிக்கையை 14 மாவட்டங்களில் இருந்தும் நீக்குவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தற்போது கேரளாவில் மழையின் அளவு சற்று குறைய வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது. கடந்த 9ம் தேதியிலிருந்து இதுவே முதல்முறையாக தற்போது இந்த எச்சரிக்கை நீக்கபடுகிறது. மேலும், ஆரஞ்சு அலேர்ட் எனப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை 11 மாவட்டங்களில் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.