புதுதில்லி :

கேரளாவில் வரலாறு காணத வகையில் பெருமழை பெய்து வருவதால் மாநிலமே வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 357 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் மீட்புபணிகள் தொடர்கிறது. இந்நிலையில் கூட இந்தியா கேரளாவிற்காக ஐ.நா.சபையிடம் எந்த உதவியையும் கேட்கவில்லை என ஐ.நா பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். இது இந்திய மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட பேரிழப்பு, உயிர்பலி மற்றும் மக்களின் இடப்பெயர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை வேதனை கொண்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கேரளாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  இது இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் கேரளாவின் நிலைமையை அங்கு இருக்கும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.