ரியாத் :

வெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு உதவியாக முதற்கட்டமாக சவுதிஅரேபியா  ரூ.70 கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கேரள மழை வெள்ள துயரத்தை கண்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு  பிரபலங்கள்  நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சவுதி அரேபிய அரசும் நிவாரண பொருட்கள் அனுப்பியுள்ளது. மேலும் உதவிக் குழு அமைத்திட தேசிய அவசர அமைப்புக்கு சவுதி அரசு உத்தரவிட்டது.  அதோடு, கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல் கட்டமாக ஒரு கோடி டாலர் நிதி உதவி அளிக்கிறது. 1கோடி டாலர் என்பது 69 கோடியே 80 லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.