சென்னை,
சென்னை ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தலில் கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். இதில் கே.முருகன், பி. அலமேலு, எஸ்.பிச்சையம்மாள், எஸ்.பூங்குழலி ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். இவர்களில் கே.முருகன், எஸ்.பவானி இருவரும் வட சென்னை மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆவர். இளங்கோ கூட்டுறவு கடன் வங்கித் தேர்லில் பெண்கள் சார்பில் போட்டியிட்ட எஸ்.பவானி வெற்றி பெற்றார். அசோக் லேலண்டு கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடன் வழங்கும் சங்கத்தில் தவமணி, வீட்டு வசதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தில் ஜி.விநாயகம், எவரெடி வீட்டுவசதி கடன் கூட்டுறவு சங்கத்தில் பொன் னப்பன் ஆகியோர் வெற்றி பெற் றுள்ளனர்.

அண்மையில் நடைபெற்று வந்த கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்லில் சென்னை முழுவதிலும் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் கள்ள வாக்காளர்களை மொத்தமாக இறக்கி வாக்களிக்க வைத்தனர். இதனைத் தடுக்க பயனீட்டாளர்கள் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் கடுமையாகப் போராட்டம் நடத்தினர். ஜார்ஜ்டவுன் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல இடங்களில் தள்ளுமுள்ளு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் காவல்துறையினர் அதிமுகவினருக்குத் துணைபோன சம்பவமும் நடைபெற்றது.  கடந்த காலத்தில் தேர்தல் நடைமுறையில் ஆளுங்கட்சியினர் நிகழ்த்திய மோசடி காரணமாக தேர்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது இதனை எதிர்த்தும் முறையான தேர்தல் நடத்தக்கோரி நுகர்வோர் நலச்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது.

இதனையடுத்து, முறையாகத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வியாழனன்று (ஆக.16) நடைபெற்றத் தேர்தலில் அதிமுகவினர் அடையாள அட்டையின்றி கள்ளவாக்கு அளித்த நிலையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இது நேர்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி என்று சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தர் ராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.