ஆகஸ்ட் 20ஐ தேசிய அறிவியல் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்க அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2018 பிப்ரவரியில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்த 16வது அகில இந்திய மக்கள் அறிவியல் மாநாட்டில் இந்நாளை அனுசரிக்க வேண்டுமென தீர்மானம் இயற்றப்பட்டது. நமது அறிவியல் இயக்கங்கள் மட்டுமல்லாது, நமது மாநிலத்தில், மாவட்டத்தில் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களையும், அறிவியல் அறிஞர்களையும், ஆசிரியர், ஊழியர் சங்கங்களையும் இணைத்து மிகப்பரவலான முறையில் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘அறிவியல் மனப்பான்மை’ என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றான 51(A) H விதியின் படி அறிவியல் மனப்பான்மை கொண்டு,மனித நேயம் வளர்த்து, எதையும் விசாரித்தறிந்து, மாற்றங்களுக்கான உணர்வுகளை உருவாக்கி, அவற்றை மேம்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.  இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற வார்த்தைகளை இந்திய நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை கொண்டவர். அறிவியல் முறையில் அணுகுவது உண்மையைத் தேடுவது. புதிய அறிவினைத் தேடுவது. சோதனை இல்லாமல் ஏற்றுக் கொள்ளாதது. புதிய ஆதாரங்களின் அடிப்படையில் பழைய கருத்துக்களை மாற்றிக் கொள்வது. உற்றுநோக்கி ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது. ஏற்கெனவே இருக்கும் கருத்தின் அடிப்படையில் முடிவுக்குவராது இருப்பது. திட எண்ணத்துடன் விடா முயற்சியுடன் உண்மையைக் கண்டறிய அறிவியல் ஆய்வுகள் செய்வது போல் வாழ்க்கையிலும் நடப்பது என்பனவற்றை வலியுறுத்துகிறார் ஜவஹர்லால் நேரு (1946, டிஸ்கவரி ஆப் இந்தியா).நேருவுக்கு முன்னரே அறிவியல் மனப்பான்மை குறித்த கருத்துக்கள் நமது இந்திய மண்ணில் உலவி வந்துள்ளன. புத்தர் கூறுகிறார்: எதையும் நம்பிவிடாதே; அது யாரோசொன்னார்கள் என்று; அது எனது பாரம்பரியம் என்று; அது எனது கற்பனையின் திறன் என்று; ஆசிரியர்சொன்னார் என்ற மரியாதைக்காக; அனுபவஸ்தர் சொல்லிவிட்டார் என்று!

எனவே எதையும் ஆராய்ந்து அலசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதற்காக நாம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார் புத்தர். இதுவே அறிவியல் மனப்பான்மையின் அடித்தளமாகும். இதன் அடிப்படையில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளில் தற்போதைய காலத்திய பிரச்சனைகளையொட்டி நான்கு முக்கிய குறிக்கோள்களை முன் வைத்து இந்தியா முழுவதும் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அறிஞர்கள், பகுத்தறிவுவாதிகளைக் கொல்லாதே!
ஆகஸ்ட்:20, இந்தியா மறக்க முடியாத ஒரு துயரமான நாள் ஆகும். ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி, இந்துத்துவா அமைப்பின் கோட்சேவால் எப்படிக் கொல்லப்பட்டாரோ அதுபோல ஆகஸ்ட் 20ல் மதவெறிக் கும்பலால் டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  டாக்டர் நரேந்திர தபோல்கர், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வாழ்ந்து வந்தார். இவர் தனது மருத்துவத் தொழிலைத் துறந்துவிட்டு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்து வந்தார். மகாராஷ்டிரா மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கம் (MANS) என்ற அமைப்பை உருவாக்கி நூற்றுக்கணக்கான செயல்வீரர்கள் மூலம் மாநிலம் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களச்செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பில்லி, சூன்யம், பேய், போலிச் சாமியார்களின் சித்து வேலைகள், நரபலி போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து இயக்கங்கள் நடத்தி வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதனை தொடர்ந்து எதிர்த்து வந்த இந்து சமயசார் தீவிரவாதக் குழுக்கள் அவருக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்தனர். ஆகஸ்ட் 20 அன்று அவர் நடைபயிற்சிக்குச் செல்லும்போது அதிகாலையில்அடையாளம் தெரியாத இருவர் சுட்டுக்கொன்றனர். இன்றும் அவரைக் கொன்றவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவருடைய உயிர்த்தியாகம் அம்மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தபோல்கரைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே கோலாப்பூரில் பிப்ரவரி 2015ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சிவாஜியின் உண்மையான வரலாற்றை தாய்மொழியில் எழுதி மக்களிடம் பரவலாக எடுத்துச்சென்றார், மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் புகழும் இந்துத்துவா குழுக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதனால் இந்துத்துவா தீவிரவாத குழுவினரால் இவரும் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2015 ஆகஸ்ட் 30ல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் துணை வேந்தரும் சிறந்த இலக்கியவாதியுமான முனைவர் எம்.எம். கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் வீட்டிற்கு வந்த இருவரில் ஒருவர் மாணவர்போல் வீட்டுக்குள் சென்று நேருக்கு நேராகச் சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி தப்பிச் சென்றார். முனைவர் கல்புர்கி 14ம் நூற்றாண்டு சமூக சீர்திருத்தவாதி பசவண்ணாவின் கருத்துக்களில் ஈடுபாடு மிக்கவர். அவரது கருத்துக்களை பன்மொழிகளில் மொழியாக்கம் செய்து வந்தவர். இவரது கொள்கைகள் பெரும்பான்மை மக்களை ஈர்த்தது. இதுவே இவரது படுகொலைக்குக் காரணமானது. 2017 நவம்பர் 5 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும்முன் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரும் இந்துமத பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பசவண்ணாவின் கருத்துக்களைப் பரப்புபவராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நான்கு படுகொலைகளும் இந்தியாவை உறைய வைத்தவை. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பின் இந்துத்துவ மதவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளாக இவை கருதப்படுகின்றன.  இது போன்ற அறிவியலாளர்கள், பகுத்தறிவாளர்கள் கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைத்துக் குடிமக்களுக்குமான கடமையாகும்.

போலி அறிவியல் பரப்புதலை நிறுத்துதல்:
கடந்த நான்கு வருடங்களாக பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், தேச பக்த கல்வியாளர்கள் போலி அறிவியலைப் பரப்பி வருகின்றனர். யானை முகங்கொண்ட கணபதி பிளாஸ்டிக் சர்ஜரியால் உருவானவர் என்றும், 7000 வருடங்களுக்கு முன்னரே கோள்களுக்கிடையே செல்லும் ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதென்றும், குந்தி தேவியின் முதல் மகன் கர்ணன் டெஸ்ட் டியூப் பேபி என்றும், ஆண்மயிலின் கண்ணீரை அருந்தி பெண் மயில் இனப்பெருக்கம் செய்கிறதென்றும், டார்வின் கொள்கையில் கூறியது போல் (அப்படிக் கூறவில்லை) குரங்கில் இருந்து மனிதன் வந்ததை நானும் பார்த்ததில்லை- எங்கள் மூதாதையர்களும் பார்த்ததில்லை. இது குறித்து எங்கள் மூதாதையர்கள் எழுதவில்லை என்று பேசுவதும், மகாபாரத காலத்தில் இன்டெர்நெட் இருந்ததென்றும் மெத்தப் படித்தவர்களும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் உயர்நிலையில் இருப்பவர்கள் பெருமைபடப் பேசிவருவது இந்திய நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது.

இந்தியாவின் உண்மை அறிவியல் தொழில்நுட்பம் சிந்து சமவெளியில் துவங்கியது. பின்னர் பூஜ்யத்தைக் கண்டறிந்தது; சுஷ்ருதர் போன்றோர் நுண்ணறுவைச் சிகிச்சைக் கருவிகள் கண்டறிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டது; ஆரியபட்டா, வராஹமிகிரர், பாஸ்கரா போன்றோர் வானவியலில் கிரகணங்கள் உருவானதைக் கண்டுபிடித்தது; விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்களின் கண்டுபிடிப்புகள் என நமது பண்டைய அறிவியல் தொழில்நுட்பம் பெருமைமிக்கது. மேலும் விடுதலைக்குப் பின் நடந்த அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி தற்போதைய செவ்வாய் கிரகம்வரை நாம் சென்றதை பறைசாற்றுகிறது. அப்படியிருந்தும் இவர்கள் புராணகால கற்பனைகளை விஞ்ஞானமாக்கி உண்மைபோலப் பேசுவது ஏன்? புராணகாலத்திற்குப் பின் நடந்த அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாம் இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை? ஏன்அதை பெருமையாகப் பேசவில்லை? இவர்கள் இந்தியாவின் பண்டைய கற்பனைகளை அறிவியலாக்கி வேதகாலத்தைப் பொற்காலமாகச் சித்தரித்து அன்றைய வர்ணாசிரம முறையை நியாயப்படுத்த முனைகின்றனர். விடுதலைக்குப் பின் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் அங்கீகரிக்கத் தவறுகின்றனர்.

அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் & ஆராய்ச்சிகள் செல்லும் தற்போதைய திசையை மாற்றுவது ;
நமது உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கள் அனைத்தையும் தகுதியற்ற அரசின் ஆதரவாளர்களுக்கு வழங்குவதும், உயர் கல்வி நிலையங்களில் கல்வியில் அறிவியல்பூர்வமற்ற பாடங்களைத் திணிப்பதும், உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்துவதும் குறைப்பதும், உயர்கல்வியில் விமர்சனப்பூர்வமான மாணவர்களை அடக்கி ஒடுக்குவதும் போன்ற நிகழ்வுகள் இன்று உயர்கல்வி நிறுவனங்களைப் பதற்றத்தில் வைத்துள்ளன. மேலும் நமது அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான அரசின் ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் கூட உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதத்தை எட்டாத ஆராய்ச்சிக்கான நிதியானது இப்பொழுது மேலும் குறைக்கப்பட உள்ளது. ஆராய்ச்சிக்கான நிதியை அந்தந்த நிறுவனங்களே திரட்டிக் கொள்ளவேண்டுமென அரசு அறிவித்து உள்ளது. சிஎஸ்ஐஆர் என்ற மைய ஆராய்ச்சி அமைப்பிற்கு 50 சதவீதம் நிதியைஅந்தந்த அமைப்புகளே திரட்டிக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. இது நமது அனைத்து ஆராய்ச்சிகளையும் முடக்குவதற்கான முயற்சி ஆகும். அதற்குப்பதிலாக காவியங்களிலும் புராணங்களிலும் நம்பிக்கையிலும் புனையப்பட்டுள்ள ராமர் பாலம், சஞ்சீவி மலை,சரஸ்வதி நதி, பசுவின் சிறுநீர் முதல் சாணம் வரைஆராய்ச்சி செய்வதற்கு அதிக நிதி ஒதுக்குவது என்ற மத்திய அரசின் போக்கினை எதிர்த்தும்; உண்மையான அறிவியலுக்கு நிதி ஒதுக்குவதன் மூலமே நமது நாடு உலகளவில் முன்னேறமுடியும் எனவும் மக்களுக்குத் தெரிவிப்பது.

தற்போதைய நியாயமற்ற வளர்ச்சித் திட்டங்களைக் கைவிடக் கோருதல்:
அறிவியலும் தொழில்நுட்பமும் பெருமளவில் வளர்ந்துள்ள சூழ்நிலையில் சுற்றுச்சூழலை அழித்து அமல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பெருவாரியான மக்களுக்குப்பயன்படுவதாக உள்ளதா? ஸ்மார்ட் சிட்டி, புல்லட் ட்ரெயின், எட்டுவழிச் சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள், பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள், விவசாய நிலங்களில் எண்ணெய்எரிவாயு துரப்பணங்கள், சாகர்மாலா திட்டங்கள் என இயற்கை வளங்களை அழித்துசெயல்படுத்தப்பட உள்ள இவைகளினால் பயன்பெறுவோர் யார்? பாதிக்கப்படுபவர்கள் யார்? பயன் பெறுவோர் கார்ப்பரேட்கம்பெனிகள், வசதிபடைத்தோர் என்ற சிறுகுழுவினரும்; பாதிக்கப்படுபவர்கள் வாழ்வா தாரங்களை இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்கள் என்பது தானே கண்கூடு. இது மாதிரியான பிரச்சனைகளை அறிவியல் மனப்பான்மை மிக்கோர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த அறிவியல் மனப்பான்மையை பரவச் செய்வதற்கு ஆகஸ்ட்- 20ஐ தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியை நாடு முழுவதும் அனுசரிப்பதற்காக மிகச் சிறந்த விஞ்ஞானிகளான டாக்டர் ஜெயந்த் நாரலிகர்,

டாக்டர். நரேஷ் தாதீச், டாக்டர். ஸ்பென்டா வாடியா, டாக்டர் வித்யானந்த் நஞ்சுண்டய்யா, டாக்டர் கே.சுப்பிரமணியம், டாக்டர் சத்யஜித் ராத் மற்றும் பல விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் அறிவியல் இயக்கக்கூட்டமைப்பும் தபோல்கரின் அமைப்பும் இணைந்து அனைத்து அறிவியல் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், அகில இந்திய அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு ஆகஸ்ட் 20ஐ தேசிய அறிவியல் விழிப்புணர்வு நாளாக அனுசரிக்க அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 2018 பிப்ரவரியில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்த 16வது அகில இந்திய மக்கள் அறிவியல் மாநாட்டில் இந்நாளை அனுசரிக்க வேண்டுமென தீர்மானம் இயற்றப்பட்டது. நமது அறிவியல் இயக்கங்கள் மட்டுமல்லாது, நமது மாநிலத்தில், மாவட்டத்தில் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களையும், அறிவியல் அறிஞர்களையும், ஆசிரியர், ஊழியர் சங்கங்களையும் இணைத்து மிகப்பரவலான முறையில் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ‘அறிவியல் மனப்பான்மை’ என்பது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றான51(A) H விதியின் படி அறிவியல் மனப்பான்மை கொண்டு, மனித நேயம் வளர்த்து, எதையும் விசாரித்தறிந்து, மாற்றங்களுக்கான உணர்வுகளை உருவாக்கி, அவற்றை மேம்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ‘அறிவியல் மனப்பான்மை’ என்ற வார்த்தைகளை இந்திய நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை கொண்டவர். அறிவியல் முறையில் அணுகுவது உண்மையைத் தேடுவது. புதிய அறிவினைத் தேடுவது. சோதனை இல்லாமல் ஏற்றுக் கொள்ளாதது. புதிய ஆதாரங்களின் அடிப்படையில் பழைய கருத்துக்களை மாற்றிக் கொள்வது. உற்றுநோக்கி ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது. ஏற்கெனவே இருக்கும் கருத்தின் அடிப்படையில் முடிவுக்குவராது இருப்பது. திட எண்ணத்துடன் விடா முயற்சியுடன் உண்மையைக் கண்டறிய அறிவியல் ஆய்வுகள் செய்வது போல் வாழ்க்கையிலும் நடப்பது என்பனவற்றை வலியுறுத்துகிறார் ஜவஹர்லால் நேரு (1946, டிஸ்கவரி ஆப் இந்தியா). நேருவுக்கு முன்னரே அறிவியல் மனப்பான்மை குறித்த கருத்துக்கள் நமது இந்திய மண்ணில் உலவி வந்துள்ளன.  புத்தர் கூறுகிறார்: எதையும் நம்பிவிடாதே; அது யாரோசொன்னார்கள் என்று; அது எனது பாரம்பரியம் என்று; அது எனது கற்பனையின் திறன் என்று; ஆசிரியர்சொன்னார் என்ற மரியாதைக்காக; அனுபவஸ்தர் சொல்லிவிட்டார் என்று! எனவே எதையும் ஆராய்ந்து அலசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதற்காக நாம் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார் புத்தர். இதுவே அறிவியல் மனப்பான்மையின் அடித்தளமாகும்.

இதன் அடிப்படையில் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளில் தற்போதைய காலத்திய பிரச்சனைகளையொட்டி நான்கு முக்கிய குறிக்கோள்களை முன் வைத்து இந்தியா முழுவதும் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிஞர்கள், பகுத்தறிவுவாதிகளைக் கொல்லாதே!ஆகஸ்ட்:20, இந்தியா மறக்க முடியாத ஒரு துயரமான நாள் ஆகும். ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி, இந்துத்துவா அமைப்பின் கோட்சேவால் எப்படிக் கொல்லப்பட்டாரோ அதுபோல ஆகஸ்ட் 20ல் மதவெறிக் கும்பலால்டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  டாக்டர் நரேந்திர தபோல்கர், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வாழ்ந்து வந்தார். இவர் தனதுமருத்துவத் தொழிலைத் துறந்துவிட்டு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்து வந்தார். மகாராஷ்டிரா மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கம் (MANS) என்ற அமைப்பை உருவாக்கி நூற்றுக்கணக்கான செயல்வீரர்கள் மூலம் மாநிலம் முழுவதும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களச்செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக பில்லி, சூன்யம், பேய், போலிச் சாமியார்களின் சித்து வேலைகள், நரபலி போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து இயக்கங்கள் நடத்தி வந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதனை தொடர்ந்து எதிர்த்து வந்த இந்து சமயசார் தீவிரவாதக் குழுக்கள் அவருக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்தனர். ஆகஸ்ட் 20 அன்று அவர் நடைபயிற்சிக்குச் செல்லும்போது அதிகாலையில்அடையாளம் தெரியாத இருவர் சுட்டுக்கொன்றனர். இன்றும் அவரைக் கொன்றவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவருடைய உயிர்த்தியாகம் அம்மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தபோல்கரைத் தொடர்ந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே கோலாப்பூரில் பிப்ரவரி 2015ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சிவாஜியின் உண்மையான வரலாற்றை தாய்மொழியில் எழுதி மக்களிடம் பரவலாக எடுத்துச்சென்றார், மகாத்மாவைச் சுட்டுக்கொன்ற கோட்சேவைப் புகழும் இந்துத்துவா குழுக்களை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இதனால் இந்துத்துவா தீவிரவாத குழுவினரால் இவரும் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

2015 ஆகஸ்ட் 30ல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் துணை வேந்தரும் சிறந்த இலக்கியவாதியுமான முனைவர் எம்.எம். கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் வீட்டிற்கு வந்த இருவரில் ஒருவர் மாணவர்போல் வீட்டுக்குள் சென்று நேருக்கு நேராகச் சுட்டுக் கொன்றுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி தப்பிச் சென்றார். முனைவர் கல்புர்கி 14ம் நூற்றாண்டு சமூக சீர்திருத்தவாதி பசவண்ணாவின் கருத்துக்களில் ஈடுபாடு மிக்கவர். அவரது கருத்துக்களை பன்மொழிகளில் மொழியாக்கம் செய்து வந்தவர். இவரது கொள்கைகள் பெரும்பான்மை மக்களை ஈர்த்தது. இதுவே இவரது படுகொலைக்குக் காரணமானது. 2017 நவம்பர் 5 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும்முன் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரும் இந்துமத பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பசவண்ணாவின் கருத்துக்களைப் பரப்புபவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நான்கு படுகொலைகளும் இந்தியாவை உறைய வைத்தவை. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பின் இந்துத்துவ மதவெறியர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளாக இவை கருதப்படுகின்றன. இது போன்ற அறிவியலாளர்கள், பகுத்தறிவாளர்கள் கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைத்துக் குடிமக்களுக்குமான கடமையாகும்.போலி அறிவியல் பரப்புதலை நிறுத்துதல் கடந்த நான்கு வருடங்களாக பிரதமர் உட்படமத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், தேச பக்த கல்வியாளர்கள் போலிஅறிவியலைப் பரப்பி வருகின்றனர். யானை முகங்கொண்ட கணபதி பிளாஸ்டிக் சர்ஜரியால் உருவானவர் என்றும், 7000 வருடங்களுக்குமுன்னரே கோள்களுக்கிடையே செல்லும் ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதென்றும், குந்தி தேவியின் முதல் மகன் கர்ணன் டெஸ்ட் டியூப் பேபி என்றும், ஆண்மயிலின் கண்ணீரை அருந்தி பெண் மயில் இனப்பெருக்கம் செய்கிறதென்றும், டார்வின் கொள்கையில் கூறியது போல் (அப்படிக் கூறவில்லை) குரங்கில் இருந்துமனிதன் வந்ததை நானும் பார்த்ததில்லை- எங்கள் மூதாதையர்களும் பார்த்ததில்லை. இது குறித்து எங்கள் மூதாதையர்கள் எழுதவில்லை என்று பேசுவதும், மகாபாரத காலத்தில் இன்டெர்நெட் இருந்ததென்றும் மெத்தப் படித்தவர்களும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் உயர்நிலையில் இருப்பவர்கள் பெருமைபடப் பேசிவருவது இந்திய நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது.

இந்தியாவின் உண்மை அறிவியல் தொழில்நுட்பம் சிந்து சமவெளியில் துவங்கியது. பின்னர் பூஜ்யத்தைக் கண்டறிந்தது; சுஷ்ருதர் போன்றோர் நுண்ணறுவைச் சிகிச்சைக் கருவிகள் கண்டறிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டது; ஆரியபட்டா, வராஹமிகிரர், பாஸ்கரா போன்றோர் வானவியலில் கிரகணங்கள் உருவானதைக் கண்டுபிடித்தது; விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்களின் கண்டுபிடிப்புகள் என நமது பண்டைய அறிவியல் தொழில்நுட்பம் பெருமைமிக்கது. மேலும் விடுதலைக்குப் பின் நடந்த அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி தற்போதைய செவ்வாய் கிரகம்வரை நாம் சென்றதை பறைசாற்றுகிறது. அப்படியிருந்தும் இவர்கள் புராணகால கற்பனைகளை விஞ்ஞானமாக்கி உண்மைபோலப் பேசுவது ஏன்? புராணகாலத்திற்குப் பின் நடந்த அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாம் இவர்கள் கண்ணில் ஏன் படவில்லை? ஏன்அதை பெருமையாகப் பேசவில்லை? இவர்கள் இந்தியாவின் பண்டைய கற்பனைகளை அறிவியலாக்கி வேதகாலத்தைப் பொற்காலமாகச் சித்தரித்து அன்றைய வர்ணாசிரம முறையை நியாயப்படுத்த முனைகின்றனர். விடுதலைக்குப் பின் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் அங்கீகரிக்கத் தவறுகின்றனர்.

அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் & ஆராய்ச்சிகள் செல்லும் தற்போதைய திசையை மாற்றுவது நமது உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்கள் அனைத்தையும் தகுதியற்ற அரசின் ஆதரவாளர்களுக்கு வழங்குவதும், உயர் கல்வி நிலையங்களில் கல்வியில் அறிவியல்பூர்வமற்ற பாடங்களைத் திணிப்பதும், உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்துவதும் குறைப்பதும், உயர்கல்வியில் விமர்சனப்பூர்வமான மாணவர்களை அடக்கி ஒடுக்குவதும் போன்ற நிகழ்வுகள் இன்று உயர்கல்வி நிறுவனங்களைப் பதற்றத்தில் வைத்துள்ளன. மேலும் நமது அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான அரசின் ஆதரவு குறைந்து கொண்டு வருகிறது. இன்னும் கூட உள்நாட்டு மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதத்தை எட்டாத ஆராய்ச்சிக்கான நிதியானது இப்பொழுது மேலும் குறைக்கப்பட உள்ளது. ஆராய்ச்சிக்கான நிதியை அந்தந்த நிறுவனங்களே திரட்டிக் கொள்ளவேண்டுமென அரசு அறிவித்து உள்ளது. சிஎஸ்ஐஆர் என்ற மைய ஆராய்ச்சி அமைப்பிற்கு 50 சதவீதம் நிதியைஅந்தந்த அமைப்புகளே திரட்டிக் கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. இது நமது அனைத்து ஆராய்ச்சிகளையும் முடக்குவதற்கான முயற்சி ஆகும். அதற்குப் பதிலாக காவியங்களிலும் புராணங்களிலும் நம்பிக்கையிலும் புனையப்பட்டுள்ள ராமர் பாலம், சஞ்சீவி மலை,சரஸ்வதி நதி, பசுவின் சிறுநீர் முதல் சாணம் வரை ஆராய்ச்சி செய்வதற்கு அதிக நிதி ஒதுக்குவது என்ற மத்திய அரசின் போக்கினை எதிர்த்தும்; உண்மையான அறிவியலுக்கு நிதி ஒதுக்குவதன் மூலமே நமது நாடு உலகளவில் முன்னேறமுடியும் எனவும் மக்களுக்குத் தெரிவிப்பது.

தற்போதைய நியாயமற்ற வளர்ச்சித் திட்டங்களைக் கைவிடக் கோருதல் அறிவியலும் தொழில்நுட்பமும் பெருமளவில் வளர்ந்துள்ள சூழ்நிலையில் சுற்றுச்சூழலை அழித்து அமல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பெருவாரியான மக்களுக்குப்பயன்படுவதாக உள்ளதா? ஸ்மார்ட் சிட்டி, புல்லட் ட்ரெயின், எட்டுவழிச் சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள், பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள், விவசாய நிலங்களில் எண்ணெய்எரிவாயு துரப்பணங்கள், சாகர்மாலா திட்டங்கள் என இயற்கை வளங்களை அழித்து செயல்படுத்தப்பட உள்ள இவைகளினால் பயன்பெறுவோர் யார்? பாதிக்கப்படுபவர்கள் யார்? பயன் பெறுவோர் கார்ப்பரேட்கம்பெனிகள், வசதிபடைத்தோர் என்ற சிறுகுழுவினரும்; பாதிக்கப்படுபவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்கள் என்பது தானே கண்கூடு. இது மாதிரியான பிரச்சனைகளை அறிவியல் மனப்பான்மை மிக்கோர் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த அறிவியல் மனப்பான்மையை பரவச் செய்வதற்கு ஆகஸ்ட்- 20ஐ தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சியை நாடு முழுவதும் அனுசரிப்பதற்காக மிகச் சிறந்த விஞ்ஞானிகளான டாக்டர் ஜெயந்த் நாரலிகர்,

டாக்டர். நரேஷ் தாதீச், டாக்டர். ஸ்பென்டா வாடியா, டாக்டர் வித்யானந்த் நஞ்சுண்டய்யா, டாக்டர் கே.சுப்பிரமணியம், டாக்டர் சத்யஜித் ராத் மற்றும் பல விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் அறிவியல் இயக்கக்கூட்டமைப்பும் தபோல்கரின் அமைப்பும் இணைந்து அனைத்து அறிவியல் அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், அகில இந்திய அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு 

Leave a Reply

You must be logged in to post a comment.