ஜகர்தா :

இன்று ஆரம்பமான 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

போட்டியின் முதல் நாளான இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஜப்பான் நாட்டின் டகாடானி டைச்சியை எதிர்கொண்டார். கடுமையாக நடந்த இப்போட்டியில் இறுதிவரை போராடிய புனியா 11க்கு 8 என்ற கணக்கில் டைச்சியை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முதல் தங்கத்தை பெற்றுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: