திருப்பூர்.
திருப்பூர் மாநகரில் செல்ல கூடிய வாகனங்களில் அதிகபடியான சப்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது.

திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. திருப்பூர் மாநகரில் முக்கிய சாலைகளாக 8 சாலைகள் உள்ளன. இதில் அதிகப்படியாக வாகனங்கள் காலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக் கூடியவர்களும் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்புவர்களும் பயன் படுத்துகின்றனர். இந்நிலையில் பனியன் நிறுவனங்களின் தேவைக்காக அதிகளவில் வாகனங்கள் பயன்படுகின்றன. மேலும், சுற்றுலா வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்கள் மற்றும் பைப் வகையான ஹாரன்களை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அரசாங்க விதிகளின் படி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தும் கூட அதனை யாரும் மதிப்பதாக இல்லை. இது போன்ற அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஹாரன்கள் பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தில் செல்பவர்கள் விபத்துகுள்ளாகின்றனர். அதுமட்டுல்லாமல் வயது முதியவர்கள் சாலையில் செல்லும் பொழுது இது போன்ற ஹாரன்களின் அதிக சப்தத்தால் பதற்றம் போன்ற உடல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்.

எனவே, இது போன்ற ஹாரன்களை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.