பாட்னா,

பீகாரில்  வாஜ்பாய் குறித்த விமர்சனத்தை தனது முகநூலில் பதிவிட்ட ஒரு பேராசிரியரை சங்பரிவார் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கி பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் மோதிஅரி பகுதியில் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகதில் சமூகத்துறை பிரிவில் பேராசிரியராக பணி புரிபவர் சஞ்சய் குமார்.   இந்நிலையில் வாஜ்பாய் மறைவை ஒட்டி சஞ்சய் குமாரின் நண்பர் பதிவு ஒன்றை முகநூலில் பதிந்தர்.   அந்த பதிவுக்கு சஞ்சய் குமார் பதிந்த பின்னூட்டத்தில், “ஒரு பாசிச வாதி மறைந்தார்.   அடல்ஜி தனது திரும்பி வராத பயணத்தை தொடங்கினார்” என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு அவர் வாஜ்பாயை குறித்து பதிந்தமைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   அவருக்கு ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த அவருடைய இல்லத்தினுள் புகுந்து அவரை செருப்பாலும் இரும்பு கம்பிகளாலும் கடுமையாக தாக்கினர்.
சஞ்சய் குமாரரை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று பெட்ரோலை அவர் மீது ஊற்றி உள்ளனர்.    இதைத்கண்ட மாணவர்கள் அங்கு வந்து அவரை மீட்டுள்ளனர். இதையடுத்து பேராசிரியர்  சஞ்சய் குமாரை தாக்கியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சமயத்தில் அங்கிருந்த மாணவரான அமித் விக்ரம் என்பவரை காணவில்லை.   அவரை யாரேனும் கடத்தி இருக்கலாம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்ட சஞ்சய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.    இந்த தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர் எஸ் எஸ் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த 12 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: