இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் சனிக் கிழமையன்று பதவியேற்றார்.
புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டம் வெள்ளியன்று நடந்தது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.

இதில் 176 வாக்குகள் வாங்கி இம்ரான் கான் வெற்றிபெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.வாக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்கவில்லை. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சனியன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்.

Leave A Reply

%d bloggers like this: