ஜகார்த்தா:
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் 18-வது சீசன் இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் சனியன்று தொடங்கியது.
விளையாட்டு உலகில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்த தரநிலையில் உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்க ஆசிய கண்டதை சேர்ந்த 45 நாடுகள் தயார் நிலையில் உள்ளன.

சனியன்று மாலை தொடக்க விழா நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில்,இன்று முதல் போட்டிகள் துவங்குகின்றன.மொத்தம் 40 விளையாட்டுகள் 462 பிரிவுகளின் கீழ் நடத்தப்படுகின்றன.இந்த பிரிவுகளில் பங்கேற்க இந்திய சார்பில் மொத்தம் 542 வீரர்-வீரங்கனைகள் களமிறங்குகின்றனர்.

பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள இந்திய வீரர்கள்-வீராங்கனைகள்:
பாட்மிண்டன்: பி.வி.சிந்து,சாய்னா,ஸ்ரீகாந்த்.
மல்யுத்தம்: பஜ்ரங் புனியா (ஆடவர்-65 கிலோ),சுஷில்குமார் (ஆடவர்-74 கிலோ),வினேஷ் போகத்(மகளிர்-50 கிலோ).
துப்பாக்கி சுடுதல்: மனு பேக்கர் (மகளிர்).
தடகளம்: நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),ஹிமா தாஸ் (மகளிர்-400 மீ.),சீமா புனியா (மகளிர் – குண்டு எறிதல்),டுட்டி சந்த் (மகளிர்- 100 மீ, 200 மீ).
டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் (ஆடவர்-ஒற்றையர்),ரோஹன் போபண்ணா-டிவிஜ் சரண் (ஆடவர்-இரட்டையர்).
குத்துச்சண்டை: விகாஸ் கிருஷண் (ஆடவர்-75 கிலோ),சிவ தாப்பா (ஆடவர்-60 கிலோ), சோனியா லேதர் (மகளிர்-57 கிலோ).
ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா கர்மாகர்.
டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா (மகளிர் – ஒற்றையர்).
வில்வித்தை: அபிஷேக் வர்மா, தீபிகா குமாரி, ஜோதி சுரேகா.

Leave A Reply

%d bloggers like this: