தீக்கதிர்

திருப்பதியில் போலி அனுமதி சீட்டுக்கள்..!

திருப்பதி;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நாள்தோறும் அதிகாலை சுப்ரபாத சேவை நடைபெறும். அதாவது இறைவனை படுக்கையில் இருந்து எழுப்புவதாகும். இந்நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்படும். இந்நிலையில், சுப்ரபாதத்திற்கு போலி அனுமதிச் சீட்டுக்கள் வழங்கி, கோயில் ஊழியர்கள் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.