தீக்கதிர்

ஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயம் : இந்தியாவிற்கு முதல் பதக்கம்….!

ஏய்கிளே:                                                                                                                                                                                ஜூனியர் உலகக் கோப்பை சைக்கிள் பந்தயப் போட்டி சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில்,இந்தியாவின் சார்பில் அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த எசோவ் அல்பான் கலந்துகொண்டார்.

ஆண்களுக்கான கெய்ரென் பிரிவு போட்டியில் கலந்துகொண்ட எசோவ் அல்பான் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். செக் குடியரசு வீரர் ஸ்டாஸ்னி பந்தயத்தூரத்தை 10.851 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.எசோவ் அல்பான் வெறும் 0.017 நொடி பின்தங்கியதால் நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
உலக கோப்பை சைக்கிள் பந்தயப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.வெள்ளிப் பதக்கத்தை வென்று தந்த எசோவ் அல்பானுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.