புதுதில்லி;
கடந்த ஆண்டு, சிபிஎஸ்இ- பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வரும் ஆண்டில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்க, கணினி வழியாகவே வினாத்தாள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.