தீக்கதிர்

கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய மாநிலங்கள்..!

திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை
மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க
பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. தமிழகம், தில்லி, தெலுங்கானா, பீகார் ஆகிய மாநிலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றன.

கேரளாவுக்கு 20 கோடி ரூபாய் நிவாரண நிதியாக மகாராஷ்டிரா மாநில அரசு அறி
வித்துள்ளது. இதேபோல், குஜராத் மாநிலம் 10 கோடி ரூபாயும், ஜார்க்கண்ட் மாநிலம் 5 கோடி ரூபாயும் நிதி உதவி அளித்துள்ளது.இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும்
பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி, தில்லி  அரசின் சார்பில் ரூ.10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் ரூ.25 கோடி என நிதியுதவி குவிந்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கேரள மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு பீகார் அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இதேபோல், அரியானா அரசின் சார்பாக ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.கேரளாவுக்கு ஜார்க்கண்ட் அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரகுபர் தாஸ் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து குஜராத் அரசு சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு சார்பில் ரூ.20 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.சட்திஸ்கர் முதல்வர் ராமன் சிங் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநிலத்தின் வெள்ளப்பாதிப்பு குறித்து கேட்ட றிந்தார். கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் வெள்ள நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றன.