அகமதாபாத்;
இருபத்து நான்குமணி நேரத்திற்குள், ஹெலிகாப்டர்களை அனுப்பாவிட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பிணமாக மிதப்பார்கள் என்று கேரளத்தின் செங்கன்னூர் தொகுதி எம்.எம்.ஏ. ஷாஜி செரியன் கண்ணீர் விட்டு கதறியது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநில மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், மத்திய அரசு போதுமான ஹெலிகாப்டர்களை வழங்க மறுப்பதாக முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே கூறியிருந்தார்.இந்நிலையில், ஷாஜி செரியன் எம்எல்ஏ-வின் பேட்டியும், மத்திய அரசின் அலட்சியத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது. பலரும் மத்திய அரசுக்கு தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பேரிடரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கேரளத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்று, குஜராத் மாநிலத்தின் தலித் தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். கேரள வெள்ள மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: