மதுரை;
மதுரையில் நடைபெற்ற கூட்டுறவுத் தேர்தலில் திமுக, சிஐடியு, எச்எம்எஸ் தலைமை
யிலான அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் கூட்டுறவுப் பண்டகசாலை (ஏ3099) நிர்வாகக் குழு வுக்கான தேர்தல் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. மொத்த முள்ள 7,163 வாக்காளர்களில் 5,722 பேர் வாக்களித்தனர். இதில், எல்எல்எப், எஐடியுசி, டிடிஎஸ்எப், டிஎம்டிஎஸ்பி, பிஎம்கே, டியுசிசி, தி.க.தொழிற்சங்கங்கள் ஆதரவுடன் சிஐடியு 7 இடங்களுக்கும் திமுக 3 இடங்களுக்கும் எச்எம்எஸ் ஒரு இடத்திற்கும் போட்டியிட்டது.

வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு, மாலை 6 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட முடிவில் சிஐடியு 7 இடங்களையும் திமுக 3 இடங்களையும் எச்எம்எஸ் ஒரு இடத்தையும் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளன. அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
சிஐடியு சார்பில் போட்டி யிட்ட ஜி.தேவி (3,193), வி.மூக்கம்மாள் (3.126), பி.பாலசுப்பு (3,104), எஸ்.செல்வராஜ் (3,082), பி.எம்.அழகர்சாமி (3,075), பி.மகாதேவன் (3.091),ஜி.வெங்கிடுசாமி (2.968) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட்ட பி.அனந்தம்மாள் (3,217),ஏ.நவமணி (3.080), எம்.பால்பாண்டி (3,072) ஆகியோர் வெற்றி பெற்றனர்.எச்எம்எஸ் சார்பில் போட்டி யிட்ட ஏ.ஷாஜகான் 3,035 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Leave A Reply

%d bloggers like this: