===க.சுவாமிநாதன்===
‘‘மேக்ரோ ஸ்கேன்’’ தளத்தில் பொருளாதார நிபுணர் சி.பி.சந்திர சேகர் எழுதியுள்ள கட்டுரையின் தகவல்கள் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

• நவீன தாராளமயம் “பின்னடைவைச்’’ சந்தித்துள்ளது என மதிப்பிடலாமா?
பின்னடைவு என்று சொல்வதை விட புதிய தாக்கதல்களின் கட்டவிழ்ப்பு என்று இன்றைய சூழலை வர்ணிப்பதே பொருத்தமானது. நவீன தாராளமயம் என்பது பெரும் தொழிலகங்கள் மற்றும் நிதி மூலதனத்திற்கு ஆதரவாக வருமானம் மற்றும் சொத்து பகிர்வைச் செய்கிற பொருளாதார முறைமையேயாகும். அது இன்று நம்பகத்தன்மையை இழந்துள்ளது. பெரும் நிதி நெருக்கடியும். பத்தாண்டாய்த் தொடர்கிற தொழில் மந்தமும் உலகம் முழுவதும் மேல்தட்டு 1 சதவீதம் தவிர மற்ற அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. எனவே நவீன தாராளமயம். பொருளாதாரப் பிரச்சனைகளுக்கான உண்மையான மாற்று அல்ல என்பதை பெரும்பான்மையான மக்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

• புதிய தாக்குதல்களின் கட்டவிழ்ப்பு என்று எதனால் கூறுகிறீர்கள்?
ஆம். மக்களின் கோபமே ஐரோப்பிய இணையத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிற “பிரெக்சிட்’’ பிரச்சனையில் வெளிப்பட்டது, டிரம்ப் வெற்றி கூட இக்கோபத்தால் நிகழ்ந்ததுதான். மக்களின் கோபத்தால் தங்களுக்கான பொருளாதார முறைமையே சிதைப்பது விடுமோ என்ற அச்சம் 1 சதவீத மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் எழுந்துள்ளது. உலகம் முழுவதிலும் பெரும் கார்ப்பரேட்டுகள், நவீன தாராளமயக் கட்டமைப்பைச் சரிந்து விடாமல் காப்பாற்றுகிற வகையில், பொருளாதார முடிவுகள் மீது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர்.

• நவீன தாராளமயம் சந்திக்கிற சவால் எத்தகையது-

நவீன தாராளமயம் இரண்டு முனைகளில் அரசியல் ரீதியான சவால்களைச் சந்திக்கிறது. ஒருபுறம் இடதுசாரிகளின் கொள்கைப்பூர்வமான எதிர்ப்பு. மறுபுறம் சாமானிய மக்களின் கோபத்தைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற வலதுசாரிகளும் வெளிப்படுத்துகிற எதிர்ப்பு. வலதுசாரிகளின் எதிர்ப்பை வெற்று முழக்கமாக அதை முன்வைப்பவர்களால் முடித்துக் கொள்ள இயலவில்லை என்பதே டிரம்ப் அறிவிக்கிற ‘சந்தையை மூடுகிற’ நடவடிக்கைகள்.

• எத்தகைய தாக்குதலை நவீன தாராளமயவாதிகள் கட்டவிழ்த்து விடுகிறார்கள்?

மெக்சிகோ அண்மைய உதாரணம். லோபஸ் ஒப்ரதார் புதிய அதிபராக இருக்கிறார். அம்லோ என்று செல்லமாக அழைக்கப்படுகிற அவர் இடதுசாரி முழக்கங்களை முன்வைத்து மக்களை பெருமளவு ஈர்த்ததால் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்துள்ளது. அவரின் முழக்கம் ‘நவீன தாராளமயம் என்கிற நீண்ட அடர்ந்த இருளுக்கு முடிவு கட்டுவோம்’ என்பதாகும்.தேர்தல் பிரச்சாரத்தின் போது கார்ப்பரேட் நிறுவனங்கள் இவருக்கு எதிராக நேரடியாகவே களத்தில் குதித்தன. குருபோ மெக்சிகோ (சுரங்கம் – ரயில் பெரு நிறுவனம்) குருபோ ஹெர்டஸ் (உணவு) குருபோ வாஸ்கோனியா (அலுமினியம்) குருபோ சக்குவாகுவா (கட்டுமானம்) ஆகியன அவர்களது ஊழியர்கள், பங்குதாரர்கள். வாக்காளர்களுக்கு அம்லோவுக்கு வாக்களிப்பது கடும் விளைவுகளை உருவாக்குமென்று கடிதங்களை எழுதின.

• அக்கடிதங்களில் என்ன எழுதினார்கள்?

குருபோ மெக்சிகோ நிறுவனத்தின் சீப் எக்சிகியூடிவ் ஜெர்மன் லாரியோ எழுதிய கடிதம் ஓர் உதாரணம். ‘கவலைக்குரிய முன்மொழிவுகள் எங்கள் காதுகளில் விழுகின்றன. நிறுவனங்கள் தேசியமயமாகம்; எரிசக்தி, கல்வி சீர்திருத்தங்கள் திரும்பப் பெறப்படும் போன்ற கருத்துக்கள் கடிகாரமுள்ளைப் பின்னோக்கித் திருப்புவதாகும்… வெனிசூலா, அர்ஜென்டினா, கியூபா, முந்தைய சோவியத் யூனியன் போன்ற நாடுகளின் தோல்விகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’’ இப்படி அப்பட்டமாமக அரசியல் களத்தில் கார்ப்பரேட்டுகள் குதித்தார்கள். இவர்களின் நோக்கம் தெளிவானது. ‘ஏழைகளின் ஆதரவான’ கொள்கைகள் வளர்ச்சியைப் பாதிக்குமென்பதே அவர்களின் வாதம்.

• வலதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கு எதிராக எடுக்கும் நிலைகளில் எந்த அளவிற்கு உறுதியாக நிற்கிறார்கள்?

இத்தாலியில் வலதுமையக் கட்சியான பைவ் ஸ்டார் மூவ்வென்ட்டும், தீவிர வலதுசாரிக் கட்சியான லீக்கும் இணைந்து அரசாங்கம் அமைக்க உரிமை கோரின. அவர்களுக்கு பெரும்பான்மையானோர் ஆதரவும் இருந்தது. அவர்கள் பாவ்லோ சவானோவை நிதியமைச்சர் பதவிக்கு தெளிவும் செய்தார்கள். பாவ்லோ சவானோ, நவீன தாராளமயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வாரென கருதப்பட்டது. ஆனால் இத்தாலியின் அதிபர் மாட்டரெல்லா இக்கூட்டணி அமைச்சரவை பதவியேறிக அனுமதிக்க மறுத்தார். ஐ.எம்.எப். பின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி கார்லோ கொட்டரேலி என்பவரை இடைக்கால பிரதமராக நியமித்தார். வளர்முக நாடுகளில் இதுபோன்று உலகவங்கி, ஐ.எம்.எப் அதிகாரிகள் நியமிக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் வளர்ந்த நாடுகளுக்க இது புதிது. அது இத்தாலியில் நடந்தேறியது. இந்நிர்ப்பந்தத்தால் லீக் +பைவ் ஸ்டார் கூட்டணி பணிந்தது. சவானோவுக்கு பதிலாக வேறு ஒரவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இங்கு பிரச்சனை லீக் அமைப்பின் வெளிநாட்டவர்கள் மீதான எதிர்ப்பு அல்ல. நவீன தாராளமயத்திற்கு எதிரான போக்கு கூடாது என்பதே.

• மக்கள் கோபத்தை எப்படி மேல்தட்டு வர்க்கம் விளக்குகிறது?
அவர்கள் பழியை முழுக்க முழுக்க ஊழல் அரசியல் வாதிகள் மீது போடுகிறார்கள். ‘ஜனரஞ்சகம்’ நோக்கி தவறாக வழி நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். எதை மறைத்தார்கள்? நவீன தாராளமயம் உருவாக்குகிற ஏற்றத்தாழ்வை… விளிம்பு நிலை மக்களின் துயரத்தை… நவீன தாராளமயம் ஏற்படுத்தம் தனிமைப்படலை….

• எதற்காக இத்தாலி அதிபர் அப்படி நடந்து கொண்டார்?
ஆம். அவரின் நடவடிக்கை அரசியல் சீர்குலைவை உருவாக்குமென்றாலும் அவர் அதைச் செய்யத் தயங்கவில்லை. அவரை இயக்கியவர்கள் அவரை விட பலம் வாய்ந்வர்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கமான நிதியாதாரங்களை அள்ளித் தருவதன் வாயிலாக. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையே கைப்பற்றுவதென்ற திட்டத்தோடு கார்ப்பரேட்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். இத பெரும் தொழிலகங்கள் – அரசியல்வாதிகளுக்கும் இடையேயான புனிதமற்ற கூட்டணியை வெளிப்படுத்துகிறது.

• மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும், வலதுசாரி பொருளாரம் பாதைக்கும் இடையேயான முரண்பாட்டை அவாகள் எவ்வாறு கையாள்கிறார்கள்?

பெரும் தொழிலகங்கள் அரசியல்வாதிகளோடு உருவாக்குகிற கூட்டணி மற்ற பிரச்சனைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது. ‘ஐரோப்பிய இணையத்திற்கு’ எதிரான ஒருவரை நிதியமைச்சராக நியமிப்பதற்கே எதிர்ப்பை மேல்தட்டு வர்க்கம் வெளிப்படுத்துவதே தவிர தீவிர வலதுசாரிகளின் இனவெறி, தேசிய வெறி உள்ளிட்ட பிற்கோக்குத்தனமான கருத்தோட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம் இத்தகைய பிரித்தாளுகிற அரசியலே மக்களின் கவனத் உண்மைப் பிரச்சனைகளிலிருந்து திருப்புவதற்கு உதவுமென்பதில் தெளிவாக உள்ளார்கள்.

இத்தாலியில் ‘ஐரோப்பிய இணைய எதிர்ப்பிலிருந்து வலதுசாரிகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தபிறகு பின் வாங்குகிறார்கள். ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்பட்டு ‘ரோமா’ இனத்தவரை வெளியேற்ற வேண்டுமென்ற கூச்சலை தீவிர வலதுசாரி அமைப்பான ‘லீக்’ எழுப்பி வருகிறது. இதை முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும். பைவ் ஸ்டார் மூவ்மென்ட் அமைப்பும் ஐரோப்பிய இணைய எதிர்ப்பில் முனைப்போடு முன்னேற முடியவில்ல.

• இந்தியாவிற்கு இந்நிலைமைகள் எப்படிப் பொருந்துகின்றன?

இங்கேயும் பெரும் தொழிலகங்களுக்கும் அரசியலுக்குமான இணைப்பு வெளிப்படையாய்த் தெரிகிறது. மோடி அரசை கார்ப்பரேட்டுகள் பாராட்டுகிறார்கள். சீர்திருத்தம் தாமதமாவதாகத் தோன்றும் போது புகார் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கைகளிலுள்ள ஊடங்களில் மோடி அரசை விமர்சிப்பதில்லை. மதவெறி அரசியலைக் கண்டிப்பதில்லை. வன்முறைகளை சங் பரிவார் அமைப்புகள் கட்டவிழ்து விடும் போதும் மௌனம் சாதிக்கிறார்கள். ஏனெனில் இத்தகைய அரசியலால் வாக்குகளை ஈர்க்க முடியுமெனில். ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கம். கோபங்களைப் பின்னுக்குத்தள்ளி. தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்று அவர்கள் கருதுகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.