மான்செஸ்டர்:
கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி டெஸ்ட்,ஒருநாள்,டி-20 என மூன்று வகையான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்றது.

டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் (கேப்டவுன்) போது ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் சீனியர் வீரர்கள் உதவியுடன் பந்தை சேதப்படுத்தினார்.இந்த விவகாரத்தில் துரித விசாரணை மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட்டிற்கு 9 மாத தடையும்,அவருக்கு துணையாக இருந்த கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கு ஒரு வருட தடை விதித்தது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்த தடை சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.உள்ளூர் போட்டிகளுக்கு பொருந்தாது என்பதால்,தடை விதிக்கப்பட்ட 3 மாத இடைவெளியில் ஸ்மித்,வார்னர் அமெரிக்கா கிரிக்கெட் தொடரான கரீபியன் லீக்கில் (CPL) ஒப்பந்தமாகி,தற்போது அந்த தொடரில் விளையாடி வருகினறனர்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரபல உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரில் அங்கம் வகிக்கும் துர்காம் அணியுடன் பான்கிராப்ட் ஒப்பந்தம் செய்துள்ளார்.அடுத்தாண்டு (2019) சீசனில் துர்காம் அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட இருக்கிறார்.
பான்கிராப்ட்டிற்கு விதிக்கப்பட்ட தடை வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: