ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு பன்மடங்கு அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்தியா கூடுதலாக 26 பில்லியன் டாலரை, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்தியா, தனக்கான கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி மூலமே ஈடுசெய்கிறது. 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 220.43 மில்லியன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசு செலவிட்ட தொகை, சுமார் 87.7 பில்லியன் டாலர் ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் 5 லட்சத்து 65 ஆயிரம் கோடியாகும்.தற்போது 2018-19ஆம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் தேவை 227 மில்லியன் டன்னாக உயரும் என்ற நிலையில், இந்த வருடம் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு சுமார் 108 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: