கோயம்புத்தூர்;
பொதுக்கல்வியை பாதுகாப்போம், தேசத்தை பாதுகாப்போம் என்னும் விண்ணதிரும் முழக்கத்துடன் இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது வெள்ளி விழா மாநில மாநாடு பேரெ
ழுச்சியுடன் கோவையில் சனியன்று துவங்கியது. கோவை கவுண்டம்பாளையம், ராமசாமி திருமண மண்டபத்தில் மாணவத் தியாகிகள் சோமு,
செம்பு நினைவரங்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் 25 ஆவது வெள்ளிவிழா மாநாடு துவங்கியது. முன்னதாக மாணவர் தியாகி தோழர் அபிமன்யு நினைவு வளாகத்தில் தியாகிகள்
நினைவு ஜோதி பெறுதல் நிகழ்ச்சி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்றது. இதில் தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப்போராளிகள் நினைவு ஜோதி, அரியலூரில் இருந்து மாணவி டாக்டர் அனிதா நினைவு ஜோதி ஆகியவை எடுத்து வரப்பட்டு மாணவர் சங்கத்
தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், மாணவர் சங்க தியாகிகள் சோமு-செம்பு நினைவு ஜோதி, விக்கிரமசிங்கபுரம் குமார் நினைவு ஜோதி, வெண்மணி நினைவு ஜோதி, கும்பகோணம் குழந்தைகள் ஜோதி ஆகியவை மாநாட்டு வளாகத்தில் பெறப்பட்டன.மேலும், பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட மாணவர் சங்க கொடி ஒப்படைக் கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வெள்ளிவிழா மாநாட்டுக் கொடியை இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வீ.மாரியப்பன் ஏற்றி வைத்தார். இதையடுத்து மாநில தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் மாநாடு துவங்கியது.

இதில் மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவ ரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் வரவேற்புரையாற்றினார். மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் மாநாட்டை துவக்கி வைத்து இந்தியாவின் இன்றைய நிலையும், இதனை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கருத்துரையாற்றினார். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்
எஸ்.பாலா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் சி.தினேஷ் ஆகி
யோர் உரையாற்றினர்.இதனையடுத்து பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. இதில் மாணவர் சங்க மாநிலச் செயலாளர் உச்சிமாகாளி அறிக்கையை முன் மொழிந்து பேசினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் கல்விக் கொள்கை சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளன மற்றும் போராட்ட இயக்கங்கள் குறித்து விவாதித்து திட்டமிட உள்ளனர். மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.