லக்னோ;
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு உத்தரப்பிரதேசத்தில் நான்கு இடங்களில் நினைவிடம் அமைக்கப்படும்; அத்துடன் அனைத்து நதிகளிலும் அவரின் அஸ்தி கரைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.ஆக்ராவில் உள்ள பதேஸ்வர் என்ற இடம் தான் வாஜ்பாயின் பூர்வீகம் என்பதால்- ஆக்ராவிலும், கான்பூரில் கல்வி கற்றதன் அடிப்படையில் கான்பூரில் ஒன்றும், பலராம்பூர் தொகுதியில் வெற்றியைத் துவங்கியதற்காக பலராம்பூரிலும், லக்னோவில் ஐந்து முறை எம்.பி.யாக இருந்தார் என்பதற்காக லக்னோவிலுமாக- இந்த நான்கு இடங்களிலும் வாஜ்பாய்க்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து நதிகளிலும் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படும் என்று கூறியிருக்கும் ஆதித்யநாத், அஸ்தி கரைக்கப்பட உள்ள அனைத்து பெரிய, சிறிய நதிகளின் பெயர்ப்பட்டிலையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.