டேராடூன்;
உத்தரகண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வல்லறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் நிலைமை மாறவில்லை.

இந்நிலையில்தான், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பக்தா என்ற கிராமத்தில், 11 வயது சிறுமியை, சிலர் வீடு புகுந்து கடத்திச் சென்று, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்தச் சிறுமி, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 4 பேரும் அவரை கடத்திச் சென்று கொடூரமான முறையில் உயிரைப் பறித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த ‘பக்தா’ கிராம மக்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடவே, தற்போது 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: