மதுரை:
கேரளாவில் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கேரளாவில் வெள்ளப் பாதிப்பால் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜமாணிக்கம், வயநாடு மாவட்ட சப்-கலெக்டர் உமேஷ் என்பவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வேன் மூலம் வந்த அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை அங்கிருந்த ஊழியர்களோடு இணைந்து ஒவ்வொரு மூட்டையாக தங்களது தோளில் சுமந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ஜீப்பில் சென்றும், வாகனம் செல்ல முடியாத பகுதிகளுக்கு கொட்டும் மழையில் நடந்து சென்று மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: